ஒ.பி.சி இட ஒதுக்கீடு… அனைவருக்கும் கிடைத்த வெற்றி! வாதாடிய தி.மு.க எம்.பி வில்சன் பேட்டி

ஒ.பி.சி இட ஒதுக்கீடு… அனைவருக்கும் கிடைத்த வெற்றி! வாதாடிய தி.மு.க எம்.பி வில்சன் பேட்டி

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது போராடிய அனைத்துக் கட்சிகளுக்கும் கிடைத்த வெற்றி என்று தி.மு.க எம்.பியும் வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார்.

ஒ.பி.சி இட ஒதுக்கீடு… அனைவருக்கும் கிடைத்த வெற்றி! வாதாடிய தி.மு.க எம்.பி வில்சன் பேட்டி
இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ உயர் படிப்புகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து வழக்கில் ஆஜராகி வாதாடிய தி.மு.க எம்.பி வில்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தீர்ப்பின் விவரம் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும். அதன்பிறகுதான் முழு விவரம் தெரியவரும். தீர்ப்பு மிகப்பெரிய வெற்றி. தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள், ஆளுங்கட்சி என

ஒ.பி.சி இட ஒதுக்கீடு… அனைவருக்கும் கிடைத்த வெற்றி! வாதாடிய தி.மு.க எம்.பி வில்சன் பேட்டி

அனைவரும் இணைந்து தொடுத்த வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது. தீர்ப்பில் மூன்று கமிட்டி அமைக்க வேண்டும், இந்த கமிட்டி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். மூன்று மாதத்தில் குழு முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு உறுதியாகி உள்ளது. இட ஒதுக்கீடு வழங்குவதில் தடை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இனி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
தமிழகம் எப்போதுமே இட ஒதுக்கீட்டில் முன்னோடியான மாநிலமாக உள்ளது. இதை வைத்து மற்ற மாநிலங்களில் தீர்ப்பு வாங்க முடியும். லட்சக் கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இது பயனாக இருக்கும்” என்றார்.