ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் : இந்திய மருத்துவ கவுன்சில்

ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் : இந்திய மருத்துவ கவுன்சில்

இந்திய மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் ஓபிசி பிரிவினருக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் : இந்திய மருத்துவ கவுன்சில்

இந்த வழக்குகளை கட்சி பாகுபாடுகள் இன்றி அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஜூலை 27-ஆம் தேதி தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் : இந்திய மருத்துவ கவுன்சில்

இந்நிலையில் இந்த வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில் மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிஎஸ்-க்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்ச நீதிமன்றம் தான் முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும், உச்ச நீதிமன்றம் ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது என்றும் கவுன்சில் விளக்கமளித்துள்ளது.