’’போன வாரம் ஓட்டு.. ஓட்டு.. இந்த வாரம் O2.. O2..’’

 

’’போன வாரம் ஓட்டு.. ஓட்டு.. இந்த வாரம் O2.. O2..’’

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே செல்வதால் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். பிச்சை எடுத்தாவது மக்கள் காப்பாற்றுங்கள் என்று நீதிமன்றமும் கடுமை காட்டிவிட்டது. பல்வேறு புதிய நிறுவனங்கள் ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. 12 லிட்டர் ஆக்சிஜன் 400 ரூபாய்தான். வாங்கிக்கொள்ளலாம் என்ற அறிவிப்புகளும் வரத்தொடங்கி விட்டன.

’’போன வாரம் ஓட்டு.. ஓட்டு.. இந்த வாரம் O2.. O2..’’

ஏப்ரல்6ம் தேதி வாக்குப்பதிவுக்கு முன்னர் ஓட்டு கேட்டு அனைத்துக்கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்போது ஆக்சிஜன் (o2) கேட்டு அல்லாடும் நிலை வந்திருக்கிறது.

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘இந்த வார சிந்தனை’ என்ற தலைப்பில்,

“போன வாரம் வரைக்கும்
ஓட்டு ஓட்டு
என்று அலைந்த அரசு,
இந்த வாரம்
O2 O2
என்று அலைகிறது // என்று தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.