Home அரசியல் தனியே தன்னந்தனியே!’ – பரிதவிக்கும் பன்னீர்

தனியே தன்னந்தனியே!’ – பரிதவிக்கும் பன்னீர்

அதிமுக என்றாலே ராணுவக் கட்டுப்பாடு என்கிற நிலையை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் மறைந்த தலைவர் ஜெயலலிதா. அவர் இருந்தபோது, ஆளுமை மிக்க ஒற்றைத் தலைமையாக இருந்ததைப் போல, தற்போது உருவாகியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. செயற்குழு கூட்டத்தில் அரங்கேறிய காட்சிகளே இதற்கு சாட்சி என்கின்றனர் கட்சியினர்.

முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற கேள்விக்கு விடைகாணும் வகையிலேயே செயற்குழு கூட்டம் இருந்தது. வந்திருந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், நிர்வாகிகளில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தது, பன்னீர் தரப்பு முற்றிலும் எதிர்பாராத விஷயமாக இருந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி பிரபாகரன், முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே பன்னீருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

ஒரு காலத்தில் பன்னீருக்கு மிக நெருக்கமாக இருந்த நத்தம் விஸ்வநாதன் , சமீபகாலமாக பன்னீருடன் உறவாடி வருவதாக சொல்லப்பட்ட அமைச்சர் சி.வி சண்முகம் ஆகியோரும் எடப்பாடிக்கே ‘ஜே’ போட்டுள்ளனர்.

அனுதாபம் தேடிக்கொள்ள பன்னீர் வீசிய அத்தனை அஸ்திரங்களையும் மிக லாவகமாக அவருக்கு எதிராகவே எடப்பாடி திருப்பிவிட்டதை கூட்டம் ஆரவாரத்துடன் ரசித்துள்ளது.

இதன்காரணமாக, பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்துவிடும் நிலையில் உள்ளது பன்னீர்செல்வம் ஆதரவாளர் தரப்பு. ’தர்மயுத்தம்’ காலத்தில் தன் பின்னால் அணிதிரண்ட கூட்டத்தில் ஐந்து சதவீதம் கூட இப்போது இல்லாததைக் கண்டு பன்னீர் படு அப்செட் ஆகிவிட்டார் என்கிறார்கள் அவருக்கு மிக நெருக்கமானவர்கள்.

செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு வீட்டிற்குச் சென்ற ஓ.பி.எஸ், நீண்ட நேரம் தனது அறையைவிட்டு வெளியே வரவில்லையாம். நீண்ட நேரத்திற்கு பிறகு அறையைவிட்டு வெளியே வந்தவர், அங்கு காத்திருந்த சிலரிடம் ஒப்புக்கு பேசிவிட்டு வழியனுப்பி வைத்திருக்கிறார். பின்னர் ஓரிரு நபர்களிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். பேசி முடித்தவுடன் முகம் மேலும் இருண்டுபோனதாம்.

செயற்குழு கூட்டத்தில் பன்னீர் தனித்துவிடப்பட்டது குறித்து கட்சியினர் கூறுகையில், ‘’ இத்தனை வருஷம் அரசியல் பண்றாரு, ஆனா, தன்னை நம்பி வந்த யாருக்கும் எதுவும் செய்யாமல் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டால் எல்லோரும் இப்படித்தான் கைவிடுவாங்க ” என முணுமுணுக்கின்றனர். செயற்குழுவுக்கு பின்னர் தனியே தன்னந்தனியே என்கிற நிலையில் உள்ளாராம் பன்னீர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

காங்கிரஸ் கட்சிக்கு 24 அல்லது 25 தொகுதிகளை ஒதுக்க திமுக ஒப்புதல்!

திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்தது. ஆனால் திமுக தரப்பிலோ, காங்கிரசின் எதிர்பார்ப்பில் பாதிக்கும் கிழே இறங்கிச்செல்வதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இதனால், திமுகவிலிருந்து காங்கிரஸ்...

மோடி தினமும் 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார் – குஷ்பு

சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று தமிழகத்திற்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டுமென பல்வேறு பகுதிகளில் பாஜக, வெற்றிக் கொடி ஏந்திய தமிழகம் என்ற பேரணியை நடத்திவருகிறது. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற...

விசிக வேட்பாளர்கள் உத்தேசபட்டியல் என பரவும் தகவல் உண்மை அல்ல- திருமாவளவன்

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து கையெழுத்தானது. சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் விசிக போட்டியிடவுள்ளது. இதனிடையே...

23 தொகுதிகள் வரைக்கும் இறங்கிவந்துட்டோம் ஆனால்… தேமுதிக பார்த்தசாரதி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திமுகவும், அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிமுக தலைமையிலான...
TopTamilNews