பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓபிஎஸ்!

 

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓபிஎஸ்!

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, பழனிசாமி – பன்னீர்செல்வம் இடையே வெடித்த மோதலால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினர் மத்தியிலான பூசலை தீர்த்து வைக்க வேண்டிய இருவரும், நேரடி மோதலில் இறங்கியதால், கட்சி வட்டாரம் கடும் அதிர்ச்சியில் உள்ளது. தற்காலிகமாக, இருவரையும் சமாதானப்படுத்திய, மூத்த நிர்வாகிகள், இருவருக்கும் இடையே பேச்சு நடத்தி, சுமூக தீர்வு கண்ட பின், அக்.7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடிவு செய்துள்ளனர். இதனிடைய ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசுவது, கோவிலில் வழிபாடு நடத்துவது ஆகியவற்றை சில நாட்களாக செய்துவந்தார். முதல்வரை சந்திப்பதை விரும்பாமல், தலைமைச் செயலகத்தில் நடந்த, முதல்வர் பங்கேற்ற, அரசு நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார். இன்று காலை தேனிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓபிஎஸ்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கு வந்து உள்ளார். மேலும் இன்று அவருடைய இளைய மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் அவர்களின் மகன் பிறந்தநாள் என்பதால் பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.