பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாகவுள்ளது- ஓபிஎஸ்

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாகவுள்ளது- ஓபிஎஸ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைதாகி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இருப்பினும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட நிலையில், ஒருவார காலம் தமிழக ஆளுநருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாகவுள்ளது- ஓபிஎஸ்

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பே பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான்.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவை முடிவை அவமதித்து, அரசமைப்பு வழங்கும் மாநில உரிமையையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேலி செய்துள்ளார்” எனக் கூறினார்.