ரஜினியின் அரசியல் பிரவேசம்: ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’- ஓபிஎஸ்

 

ரஜினியின் அரசியல் பிரவேசம்: ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’- ஓபிஎஸ்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என்றும் அது குறித்த முக்கிய அறிவிப்பை டிச.31ம் தேதி வெளியிடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் ரஜினிகாந்த் நியமித்திருந்தார். ஆனால் உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கப்போவதில்லை என இன்று ரஜினிகாந்த் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினியின் உடல்நலம் தான் முக்கியம் என்றும், ரஜினியின் முடிவு சிறப்பானது எனவும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ரஜினியின் அரசியல் பிரவேசம்: ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’- ஓபிஎஸ்

இந்நிலையில் போடி சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதாக தெரிந்த உடன் வாழ்த்து தெரிவித்தேன். ஜனநாயகத்தில் கட்சி ஆரம்பிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. தற்போது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் எடுத்த முடிவுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடல்நிலை நன்றாக இருந்தால்தான் சிறப்பாக பணியாற்றமுடியும்” என தெரிவித்தார்.