பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் தேனியில் திடீர் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்!

 

பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் தேனியில் திடீர் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்!

முதல்வர் நாற்காலி சண்டையில் மனமுடைந்த ஓபிஎஸ், சொந்த ஊருக்கு போய்விட்டு வரலாம் என்று கடந்த புதன்கிழமை தேனிக்கு புறப்பட இருந்தார். ஆனால், காந்திஜெயந்திக்கு ஆளுநர் நிகழ்வில் பங்கேற்க வேண்டியிருந்ததால் அந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புறப்பாட்டார்.

வழக்கமாக ஓபிஎஸ் தேனிக்கு சென்றால் வழியெங்கும் வாழ்த்து கோஷங்கள் அணிவகுக்கும். ஆனால், இந்த முறை வழியெங்கும் வெறிச்சோடிக்கிடந்தது. சென்னையில் 7ம் தேதி செயற்குழு கூட்டம் இருப்பதால், 5ம் தேதி தேனியில் சில நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, அன்று இரவோ அல்லது மறுநாள் காலையில் புறப்பட்டு சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊருக்கு கிளம்பும்போதே திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் கோயிலில் சென்று பூஜை செய்து மனமுருகி வேண்டிவிட்டு தேனிக்கு கிளம்பினார். சென்னையில் இருந்தபோது தனது ஆதரவாளர்களை தொடர்ச்சியாக தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திவந்தார்.

பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் தேனியில் திடீர் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்!

இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் போடியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவரது சட்டமன்ற அலுவலகத்தில் இன்று மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேளச்சேரி அசோகன் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், போடி திருக்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.