என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

 

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸின் முகத்தில் அறைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது குற்றம் சாட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என அவரது பேரனும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான என்.வி. சுபாஷ் தெரிவித்தார்.

1992 டிசம்பர் 6ம் தேதியன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. 1991 முதல் 1996 வரை பிரதமராக நரசிம்ம ராவ்தான் பிரதமராக இருந்தார். அந்த காலத்தில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்ட எல்.கே. அத்வானி உள்பட 32 பேரையும் சி.பி.ஐ. நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது.

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்
பி.வி. நரசிம்ம ராவ்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சி.பி.ஐ. நீதிமன்றம் விடுவித்தது தொடர்பாக முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரனும், பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான என்.வி.சுபாஷ் கூறியதாவது: எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட பா.ஜ.க. தலைவர்களை சி.பி.ஐ. நீதிமன்றம் விடுவித்தது. இது காங்கிரஸின் முகத்தில் விழுந்த அறை. 1991-96 வரை பி.வி. நரசிம்ம ராவ் இந்த நாட்டின் பிரதமராக இருந்த போது, பாபர் மசூதி இடிக்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் எப்போதும் குற்றம் சாட்டினர்.பாபர் மசூதி அல்லது வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நரசிம்ம ராவை முடிந்தஅளவுக்கு தனிமைப்படுத்த காங்கிரஸ் விரும்பியது.

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்
பாபர் மசூதி இடிப்பு சம்பவம்

சீதாராம் கேசரி, அர்ஜூன் சிங், நரசிம்ம ராவ் மற்றும் பல தலைவர்களை ஒதுக்கிவிட்டு வம்ச ஆட்சியை கொண்டு வர விரும்பினார்கள். கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்களை காங்கிரஸ் பலிகடாக்கியது. மதச்சார்பற்ற என்ற வார்த்தை ராவ் காரணமாக மட்டுமே வந்தது. இடிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, ராவ் ஏற்கனவே பல்வேறு தலைவர்களுடன் பேசியிருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், பாபர் மசூதி சர்ச்சைக்குரிய இடத்தில் ஆஜரான கர சேவகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது நாடு முழுவதும் ரத்த களறி மற்றும் வன்முறைக்கு வழிவகுத்திருக்கும். காங்கிரஸ் கூட்டாக பழியை எடுத்துக்கொள்ள வேண்டும். ராவை மட்டும் குறை கூறக்கூடாது. இந்த பிரச்சினையை இப்போது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் மற்றும் வரும் நாட்களில் நாட்டின் முன்னேற்றத்துக்காக பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.