ஆட்சிக்கு வருவது பற்றி பகல் கனவு காண்பதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்… பா.ஜ.க. தலைவர் கிண்டல்

ஆட்சிக்கு வருவது பற்றி பகல் கனவு காண்பதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்… பா.ஜ.க. தலைவர் கிண்டல்

இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகின்றன. அவர்கள் அதன் மூலம் போலி செய்திகளையும், வெறுப்பையும் பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்துகிறார்கள் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு பா.ஜ.க. தலைவர்கள பதிலடி கொடுத்து வருகின்றனர். அதுபோன்று தெலங்கான பா.ஜ.க. தலைவர் என்.வி. சுபாஷ், ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆட்சிக்கு வருவது பற்றி பகல் கனவு காண்பதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்… பா.ஜ.க. தலைவர் கிண்டல்

என்.வி. சுபாஷ் இது தொடர்பாக கூறியதாவது: பா.ஜ.க.வை தரம் தாழ்த்தி ஆட்சிக்கு வர முடியாது என்பதை ராகுல் காந்தி உணர வேண்டும். அதற்கு பதிலாக மக்களிடம் தனது சொந்த கட்சி மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். காங்கிரசின் மூத்த தலைவர், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நற்பெயரை கெடுக்கும் வகையில் திரும்பாத எந்த கல்லையும் (ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லக்கூடாது) எறியக்கூடாது.

ஆட்சிக்கு வருவது பற்றி பகல் கனவு காண்பதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்… பா.ஜ.க. தலைவர் கிண்டல்

பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள், மக்கள் தங்களது கலப்படமற்ற கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கின்றன. இந்த ஊடகங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. வாக்காளர்களிடம் யாரோ தாக்கத்தை ஏற்படுத்தியதால்தான் தேர்தலில் தனது கட்சி தோற்கடிக்கப்பட்டது என்ற காந்தி இன்னும் நம்புகிறார் என்பது பரிதாபகரமான விஷயம். ஆனால் மக்களின் நம்பிக்கையை இழந்ததால்தான் அந்த கட்சி தோற்றது. பா.ஜ.க. மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தன்னை தானே ராகுல் காந்தி இழிவுப்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.