இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான்? – பரிந்துரை செய்தார் பாப்டே!

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான்? – பரிந்துரை செய்தார் பாப்டே!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்தது. அதன்பின் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த நீதிபதி பாப்டே தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். தற்போது பாப்டேவின் பதவிக்காலம் இந்தாண்டு ஏப்ரல் 23ஆம் தேதியோடு முடிவடைகிறது. இன்னும் முழுவதாக ஒரு மாத காலமே இருப்பதால் அடுத்த நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்ற பேச்சு நீதிமன்ற வட்டாரங்களிலும் மத்திய அரசு தரப்பிலும் பேசப்படுகின்றன.

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான்? – பரிந்துரை செய்தார் பாப்டே!

எப்போதுமே ஓய்வுபெறவிருக்கும் தலைமை நீதிபதி தான் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதைப் பரிந்துரை செய்வார். அவர் பரிந்துரைத்தவர் தகுதியானவரா என்பதைக் கண்டுணர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார். இது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு மரபு. குறிப்பாக சீனியாரிட்டியின் படி தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதி பரிந்துரைக்கப்படுவார்.

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான்? – பரிந்துரை செய்தார் பாப்டே!

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதினார். யாரை அடுத்த தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கலாம் என்ற கேள்வி அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி பாப்டேவுக்கு அடுத்து இருப்பவர் நீதிபதி ரமணா. தற்போது இவரின் பெயரை பாப்டே பரிந்துரைத்திருக்கிறார். கிட்டத்தட்ட ரமணா தலைமை நீதிபதியாவது உறுதியாகியிருக்கிறது.

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான்? – பரிந்துரை செய்தார் பாப்டே!

1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி பிறந்த நீதிபதி ரமணாவின் பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி வரையில் உள்ளது. ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ரமணாவின் தலையீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி பாப்டேவுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருந்தார். அதனை பாப்டே நிராகரித்தார்.

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான்? – பரிந்துரை செய்தார் பாப்டே!

தலைமை நீதிபதியாக ரமணா நியமிக்கப்பட்டால், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நீதிபதியாக இருப்பார். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000ஆம் ஆண்டு ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.