`என் தற்கொலைக்கு பேய்தான் காரணம்!’- கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்த நர்சிங் மாணவி

 

`என் தற்கொலைக்கு பேய்தான் காரணம்!’- கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்த நர்சிங் மாணவி

“என் தற்கொலைக்கு பேய்தான் காரணம்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட வேடசந்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`என் தற்கொலைக்கு பேய்தான் காரணம்!’- கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்த நர்சிங் மாணவி

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. கூலி வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் லத்திகா, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா காரணமாக தற்போது வீட்டில் இருந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் லத்திகா. அதன்பின் யாரிடமும் அவர் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் லத்திகா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், லத்திகா பென்சில் மூலமாக “தனது தற்கொலைக்கு காரணம் பேய்” என்று எழுதியிருந்தார்.

`என் தற்கொலைக்கு பேய்தான் காரணம்!’- கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்த நர்சிங் மாணவி

மேலும் அந்த கடிதத்தில், “அப்பா, அம்மா யாரோ என்னை பயமுறுத்துறாங்க. அப்பா நைட்டு தூக்கம் இல்லை. என்ன சாகவானு கூப்பிடுறாங்க. இதை சொன்னா எல்லாரையும் கொல்லுவேன் என்று சொல்லுது அந்த பேய். என்ன சாக கூப்பிடுது என்னை ஏதாவது பண்ண சொல்லுதுபா. இல்லைனா நம்ம குடும்பத்தை அழிப்பேன்னு சொல்லுதுபா. யாரோ உங்களை வசியம் பண்ணனும்னு நினைக்கிறாங்க. என்னோட பொருள் நான் பயன்படுத்திய எதுவும் தயவு செய்து வீட்டில் வைக்க வேண்டாம். எல்லாம் நன்மைக்கே. தம்பி, தங்கச்சி, நீங்க, அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கங்க. லவ் யூ மை ஃபேமிலி’ என்று எழுதி வைத்துள்ளார் லத்திகா.

இக்கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், இது லத்திகாவின் கையெழுத்தா என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லத்திகா பயன்படுத்திய செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பேய்க்கு பயந்து நர்சிங் மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.