வீட்டில் மகனைக் கூட கவனிக்காமல் மருத்துவமனையில் இன்னொரு குழந்தைக்கு பாலூட்டிய செவிலியர் !! செவிலியரின் தியாக உள்ளத்திற்கு தாய்மார்கள் பாராட்டு !!

கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில், பசியால் தொடர்ந்து அழுத ஒரு புதிய பெண் குழந்தைக்கு செவிலியர் பால் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆர்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரவு ஷிப்டில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பசியுள்ள குழந்தையின் அழுகையை செவிலியர் கேட்டார். புதிய குழந்தை பெற்றெடுத்த அந்த பெண்ணால் தாய்ப்பால் தருவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார் பணியில் இருந்த செவிலியர்.

Source:  TOI
பெண் குழந்தையின் பெற்றடுத்த தாய் பாலூட்ட ஆரம்பிக்காததால் குழந்தையின் பசியாற்ற முடியவில்லை. வழக்கமாக, ஒரு தாய் தனது குழந்தைக்கு பாலூட்ட முடியாதபோது, மகப்பேறு வார்டில் உள்ள மற்ற புதிய தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவார்கள். ஆனால் COVID-19 நோய்த்தொற்றுக்கு பயந்து பால் கொடுக்க தாய்மார்கள் தயங்குகிறார்கள்.
இதுகுறித்து பேசிய செவிலியர் ஒரு குழந்தை பசியால் அழுகிறபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் தாய்ப்பால் கொடுக்க முடிவு செய்ததாக கூறினார். அந்த குழந்தைக்கு பாலூட்டும்போது வீட்டில் இருக்கும் அவரது கணவர் வீடியோ காலில் அழைத்துள்ளார் ஏன் என்றால் அந்த செவிலியரின் மகன் தாயை பார்க்காமல் தூங்க செல்வதில்லை. ஆனாலும் மகனை சமாதானப்படுத்தி தூங்க வைக்குமாறு கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தனது கடமையை நிறைவேற்றி உள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Most Popular

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக தமிழகமும், மகாராஷ்டிராவுமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து...

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...