கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு ஏற்ற அணு குண்டு! – தயாரிப்பில் வட கொரியா தீவிரம்

 

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு ஏற்ற அணு குண்டு! – தயாரிப்பில் வட கொரியா தீவிரம்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்தும் வகையில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் வட கொரியா ஈடுபட்டுள்ளது என்று ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு ஏற்ற அணு குண்டு! – தயாரிப்பில் வட கொரியா தீவிரம்உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடாக வட கொரியா உள்ளது. தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனை, ஏவுகணை பரிசோதனை என்று அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு தலைவலியாக இருந்து வந்தது வட கொரியா. அதன் தலைவர் கிம் ஜாங் உன்னை அமெரிக்க அதிபர் சந்தித்ததைத் தொடர்ந்து வட கொரியா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு ஏற்ற அணு குண்டு! – தயாரிப்பில் வட கொரியா தீவிரம்
இந்த நிலையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் பற்றி கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “வட கொரியா தொடர்ந்து தன்னுடைய அணு ஆயுத தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அணு ஆயுதங்களை தயாரித்தும் வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகள், விமானங்கள், கப்பல்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்த வசதியா விதவிதமான அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் வட கொரியா ஈடுபட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு ஏற்ற அணு குண்டு! – தயாரிப்பில் வட கொரியா தீவிரம்கடந்த வாரம் கிம் ஜாங் உன் பேசும்போது, இனி உலகில் அணு ஆயுத தாக்குதலே இருக்காது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் வட கொரியா ஏவுகணைகளில் பொருந்தும் வகையில் அணு ஆயுதம் தயாரிப்பதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.