5100 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட ‘நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட்’ ஸ்மார்ட்போன் ஸ்பெயினில் அறிமுகம்

 

5100 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட ‘நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட்’ ஸ்மார்ட்போன் ஸ்பெயினில் அறிமுகம்

மாட்ரிட்: நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸ்மார்ட்போன் ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர ஒப்பந்த அடிப்படையில் வோடபோன் இணையதளம் வழியாக இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக விற்கப்படுகிறது. இதன் விலை 612 யூரோ (தோராயமாக ரூ.52,200) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கறுப்பு நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

இதன் சிறப்பம்சங்களாக டுயல் சிம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.65 இன்ச் ஓ.எல்.இ.டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, 48 எம்.பி ரியர் குவாட் கேமரா செட்டப், 8 எம்.பி செல்பி கேமரா, 5100 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.