நீட் தேர்வுக்கு இன்றே ஒரு முடிவு வேண்டும் : சீமான் கோரிக்கை!!

 

நீட் தேர்வுக்கு இன்றே ஒரு முடிவு வேண்டும் : சீமான் கோரிக்கை!!

‘நீட்’ எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அதே சமயம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியம் ஒருபுறம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்

நீட் தேர்வுக்கு இன்றே ஒரு முடிவு வேண்டும் : சீமான் கோரிக்கை!!

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாட்டின் பன்முகத்தன்மைக்கெதிராகவும், கூட்டாட்சிக்கெதிராகவும் கொண்டுவரப்பட்ட நீட் எனும் மத்தியத்தர ஒற்றைத்தகுதித்தேர்வு மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் உழைக்கும் ஆதி தமிழ்க்குடிகளின் பிள்ளைகளை மருத்துவராகவிடாது தடுக்கும்..

மனுதர்மத்தின் நவீன வடிவான ‘நீட்’ தேர்வை முற்று முழுதாகத் துடைத்தெரிய இன்றைக்குக் கூடியிருக்கிற முதல் தமிழகச் சட்டமன்றக் கூட்டத்திலேயே ஒரு முடிவு எட்டப்படவேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலத் தன்னாட்சியையும், மாநிலத் தன்னுரிமையையும் நிலைநாட்ட, மண்ணின் மக்களின் நலவாழ்வை உறுதிசெய்ய, மருத்துவராகும் பெருங்கனவை வர்க்கவேறுபாடின்றி யாவருக்கும் உறுதிசெய்ய ‘நீட்’ எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டுமென அறிவுறுத்துகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.