நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… எப்போ வரைனு தெரிஞ்சிகோங்க?

 

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… எப்போ வரைனு தெரிஞ்சிகோங்க?

நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்ற குழப்பத்திற்கு மத்திய கல்வி அமைச்சம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் அனுப்பும் பணி ஜூலை 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்கள் எண்ணிக்கை 155 இருந்து 198ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… எப்போ வரைனு தெரிஞ்சிகோங்க?

விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான இறுதி நாளாக ஆகஸ்ட் 6ஆம் தேதி சொல்லப்பட்டிருந்தது. இச்சூழலில் தற்போது அதனை ஆகஸ்ட் 10ஆம் தேதியாக மாற்றி தேசிய தேர்வுகள் முகமை கால அவகாசம் வழங்கியுள்ளது. அதேபோல விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் தேர்வு நடக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. சொன்னபடி செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… எப்போ வரைனு தெரிஞ்சிகோங்க?

இந்தாண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள்களிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆம் சாய்ஸ் முறையில் கேள்விகள் கேட்கப்படவுள்ளன. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்களிலிருந்தும் ஏ பிரிவில் 35 கேள்விகளும், பி பிரிவில் 15 கேள்விகளும் இடம்பெறும். ஒரு பாடத்தில் 50 கேள்விகள் என்றால் 4 பாடங்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற உள்ளன. மொத்த மதிப்பெண் 800ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பி பிரிவில் சாய்ஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏ பிரிவில் உள்ள கேட்கப்படும் அனைத்து (35) கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… எப்போ வரைனு தெரிஞ்சிகோங்க?

ஆனால் பி பிரிவில் கேட்கப்படும் 15 கேள்விகளில் நன்கு தெரிந்த 10 கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதுமானது. அதேபோல கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மேலும் நான்கு மையங்களை உயர்த்துவதாக மத்திய கல்வித் துறை அறிவித்தது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது கூடுதலாக செங்கல்பட்டு, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய நகரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டில் தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.