“பங்கருக்குள் பதுங்கிய அமித் ஷா” – காணவில்லை என போலீஸில் புகார்!

 

“பங்கருக்குள் பதுங்கிய அமித் ஷா” – காணவில்லை என போலீஸில் புகார்!

நாடே கொரோனா இரண்டாம் அலையில் சிக்கி சின்னாபின்னாமாகி இருக்கிறது. ஆக்சிஜன் இல்லாமல் கொத்து கொத்தாக இந்தியர்கள் மடிந்து வருகிறார்கள். இதற்கு நடுவே உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்களால் நிம்மதியாக இறுதிச்சடங்கு செய்ய முடியவில்லை. ரெம்டெசிவிர் வாங்க உறவினர்கள் வரிசையில் நிற்க, இடுகாடுகளில் பிணங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. மிக மிக மோசமான காலக்கட்டத்தில் இருக்கிறது.

“பங்கருக்குள் பதுங்கிய அமித் ஷா” – காணவில்லை என போலீஸில் புகார்!

இதனிடையே சில நாட்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியே எங்கும் தலை காட்டாமல் இருக்கிறார். அவர் கடைசியாக மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுவெளியில் தோன்றினார். ஏப்ரல் 26ஆம் தேதிக்குப் பிறகு அவரை எங்கேயும் காணவில்லை. நாட்டு மக்கள் கொள்ளை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில், ஒரு மத்திய அமைச்சர் சத்தம் காட்டாமல் இருப்பது பலருக்கும் வேதனையளித்திருக்கிறது.

இச்சூழலில் இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் டெல்லி நாடாளுமன்ற மார்க்க காவல் துறையினரிடம் விசித்திரமான புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரை சங்கத்தின் பொதுச் செயலாளர் நாகேஷ் கரியப்பா ஆன்லைன் மூலமாக அனுப்பியிருக்கிறார். புகாரில் அமைச்சர் அமித் ஷாவை காணவில்லை என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அப்புகார் நகலை எடுத்து ட்விட்டரிலும் கரியப்பா பதிவிட்டுள்ளார்.

இதனை டிரெண்ட் செய்த நெட்டிசன்கள் #AmitShahMissing என்ற ஹேஸ்டேக்கில் அமித் ஷாவை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், “தேர்தல்கள் முடிந்துவிட்டன. கொரோனா உச்சத்தை தொடுகிறது. இந்தச் சமயத்தில் அமைச்சர் அமித் ஷா அண்டர்கிரவுண்டில் பதுங்கிவிட்டார்” என பதிவிட்டிருக்கிறார்.