உளவு தொழில்நுட்பங்களால்தான் கோடிக்கணக்கான மக்கள் இரவில் நிம்மதியாக உறங்கின்றனர்.. இஸ்ரேல் நிறுவனம் பதிலடி

உளவு தொழில்நுட்பங்களால்தான் கோடிக்கணக்கான மக்கள் இரவில் நிம்மதியாக உறங்கின்றனர்.. இஸ்ரேல் நிறுவனம் பதிலடி

பெகாசஸ் போன்ற உளவு தொழில்நுட்பங்கள் அரசின் உளவு அமைப்புகளுக்கு கிடைப்பதால்தான் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறது என்று இஸ்ரேல் இணைய கண்காணிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ. பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா உள்பட பல நாடுகளில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் செல்போன் எண்களை இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸ் மூலம் ஹேக்கிங் செய்யப்பட்டு அவரது தகவல்கள் திருடப்படுகிறது, போன்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது என்று செய்தி வெளியானது. இது தனியுரிமை தொடர்பான பிரச்சினைகள் குறித்த கவலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் பெகாசஸ் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ. குழுமம் தனது நியாயமான வாதத்தை முன்வைத்து தன்னை தற்காத்து கொண்டுள்ளது.

உளவு தொழில்நுட்பங்களால்தான் கோடிக்கணக்கான மக்கள் இரவில் நிம்மதியாக உறங்கின்றனர்.. இஸ்ரேல் நிறுவனம் பதிலடி
பெகாசஸ் சாப்ட்வேர்

என்.எஸ்.ஓ. குழுமத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இரவில் நன்றாக தூங்குகிறார்கள், பாதுகாப்பாக தெருக்களில் நடக்கிறார்கள் இதற்கு பெகாசஸ் மற்றும் அது போன்ற தொழில்நுட்பங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த தொழில்நுட்பங்கள் உலகின் அரசுகளின் உளவு அமைப்புகள், சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு குற்றங்கள், தீவிரவாதம் மற்றும் சட்டவிரோத பாலியல் செயல்பாடுகளை தடுக்க மற்றும் விசாரிக்க உதவுகிறது.

உளவு தொழில்நுட்பங்களால்தான் கோடிக்கணக்கான மக்கள் இரவில் நிம்மதியாக உறங்கின்றனர்.. இஸ்ரேல் நிறுவனம் பதிலடி
உளவு அமைப்புகள்

உலகில் உள்ள சட்ட அமலாக்க அமைப்புகள் இருளில் இருப்பதால் என்.எஸ்.ஓ. மற்றும் உலகின் பிற இணைய புலனாய்வ நிறுவனங்களுடன் இணைந்து இணைய உளவு கருவிகளை அரசாங்களுக்கு விற்பனை செய்கிறது. மேலும் உடனடி செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தீங்கிழைக்கும் செயல்களை கண்காணிக்க அனுமதிக்கும் எந்த ஒழுங்குமுறை (சட்டங்கள்) தீர்வும் இல்லை. பாதுகாப்பான உலகத்தை உருவாக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.