• February
    22
    Saturday

Main Area

Main



மாநில அரசு பங்களிப்பு இல்லாமல் என்.ஆர்.பி முடியாது! - ப.சிதம்பரம்

P Chidambaram
P Chidambaram

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் உடன் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உரையாடினார். அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
"மாநில அரசுகளின் பங்களிப்பு இல்லாமல் என்.ஆர்.பி-யை அமல்படுத்த முடியாது. தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வெளிப்பாடுதான் குடியுரிமை திருத்தச் சட்டம். அவர்கள் விதிவிலக்கு என்று இஸ்லாமியர்களை மட்டும் விலக்குகிறார்கள். இதன் மூலம் அவர்களை அடையாளப்படுத்தி, நாடு அற்றவர்களாக மாற்ற முயல்கிறார்கள்.

chidaparam

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காரணமாக இஸ்லாமியர்கள் யாராவது தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டால் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும்.
அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்க முடியாத 12 லட்சம் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை ஏற்கமாட்டோம் அனைத்து மாநிலங்களும் முடிவெடுக்க வேண்டும். அப்படி செய்தால் மத்திய அரசால் தேசிய மக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்த முடியாது" என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.