‘தெற்கே’ கால் பதிக்கிறது பாஜக… இனி ‘சாமி’ ஆட்டம் தான்… தொகுதி ஒதுக்கீடு நிறைவு!

 

‘தெற்கே’ கால் பதிக்கிறது பாஜக… இனி ‘சாமி’ ஆட்டம் தான்… தொகுதி ஒதுக்கீடு நிறைவு!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் அதிமுக-பாஜக இணைந்து 14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்குப் பின் ரங்கசாமியை வழிக்குக் கொண்டுவந்திருக்கிறது பாஜக. ரங்கசாமி பாஜகவை அடிபணிய வைத்திருக்கிறார் என்றும் சொல்லலாம். விடா கண்டான் கொடா கண்டான் என்ற ரீதியிலேயே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

‘தெற்கே’ கால் பதிக்கிறது பாஜக… இனி ‘சாமி’ ஆட்டம் தான்… தொகுதி ஒதுக்கீடு நிறைவு!

இறுதியில் பாஜக சாமியிடம் ஒரு படி இறங்கி டீல் பேசி முடித்திருக்கிறது. சாமி இல்லாமல் புதுச்சேரியில் எதுவும் செய்ய முடியாது என்பதை பாஜக நன்கு உணர்ந்துள்ளதையே இது காட்டுகிறது. பாஜக புதுச்சேரியில் காலூன்ற வேண்டுமென்றால் அங்கிருக்கும் முக்கியப் புள்ளியைக் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் டார்கெட் செய்த ஆசாமி நமச்சிவாயம். அவர் ஏற்கெனவே காங்கிரஸில் அங்கீகாரம் கிடைக்கவில்லை; முதலமைச்சர் பதவி பறிபோய் விட்டது போன்ற அதிருப்தியில் இருந்ததால் அவரை இழுப்பது பாஜகவுக்கு எளிதாக அமைந்தது.

‘தெற்கே’ கால் பதிக்கிறது பாஜக… இனி ‘சாமி’ ஆட்டம் தான்… தொகுதி ஒதுக்கீடு நிறைவு!

பின்னாளில் அவர் தான் இடியாப்ப சிக்கலுக்குக் காரணமாவார் என பாஜக எதிர்பார்த்திருக்காது. ஏனென்றால் முதலமைச்சர் ஆசை காட்டி ஒருவரைக் கூட்டிவர, கூட்டணியில் இருக்கும் மற்றொருவர் அதே ஆசையில் இருந்தால் என்ன செய்வது? ரங்கசாமியைப் பொறுத்தவரை அரசியல் பழம் தின்று கொட்டை போட்டவர். கூட்டணி வேண்டுமென்றால் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் பாஜக வசமாகச் சிக்கியது.

‘தெற்கே’ கால் பதிக்கிறது பாஜக… இனி ‘சாமி’ ஆட்டம் தான்… தொகுதி ஒதுக்கீடு நிறைவு!

இறுதியில் நமச்சிவாயமா, ரங்கசாமியா என்ற முடிவில் ரங்கசாமியை டிக் அடித்திருக்கிறார்கள் மோடியும் அமித் ஷாவும். தேர்தலுக்கு முந்தைய கணிப்பில் ரங்கசாமிக்கு தான் பேராதரவு இருப்பது தெரியவந்தது. தவிர அமித் ஷாவின் உளவுத்துறை ரிப்போர்ட்டும் அதேயே கூறியிருக்கிறது. இதன் காரணமாகவே ரங்கசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த முன்வந்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றால் துணை முதலமைச்சராக பாஜக சார்பில் நமச்சிவாயம் பொறுப்பேற்பார் என்று உத்தேசிக்கப்படுகிறது.