இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை… போயஸ் கார்டனில் ரஜினிக்கு வார்னிங் போஸ்டர்

 

இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை… போயஸ் கார்டனில் ரஜினிக்கு வார்னிங் போஸ்டர்

ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று உறுதிபட கூறிவிட்ட நிலையில், எப்போது என்று தெரியாமல் ரசிகர்களும் பொது மக்களும் குழம்பிப்போய்

இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை… போயஸ் கார்டனில் ரஜினிக்கு வார்னிங் போஸ்டர்

உள்ளனர். இந்த நிலையில் தி.மு.க-வுக்கு வேலை செய்யும் பிரஷாந்த் கிஷோர் ரஜினியை சந்தித்ததாகவும், தமிழக கள நிலவரம் பற்றி அவரிடம் பேசியதாகவும் செய்தி வெளியானது. இதனால், அரசியல் கட்சித் தொடங்குவதா வேண்டாமா என்று மீண்டும் ரஜினிகாந்த் ஆலோசனையில் இறங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை… போயஸ் கார்டனில் ரஜினிக்கு வார்னிங் போஸ்டர்


அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தொற்று வந்துவிடக் கூடாது என்பதால் கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் உடனடியாக கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். வழக்கமாக மதுரையில் ரஜினிகாந்த் போஸ்டர்கள் தொடர்ந்து ஒட்டப்பட்டு வந்த நிலையில், வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை… போயஸ் கார்டனில் ரஜினிக்கு வார்னிங் போஸ்டர்


அதில், “மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களைப் பற்றி சிந்திக்கும் தலைவரும் ஒன்றிணைந்தால், அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம். இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.ரவி பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. போயஸ் கார்டனிலேயே ஒட்டப்பட்டுள்ளதால் எப்படியும் தகவல் ரஜினிக்கு செல்லும், நிச்சயம் நிர்வாகிகளை விரைவில் அழைத்துப் பேசுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் ரஜினிகாந்த் மன்ற நிர்வாகிகள் சமூக ஊடக பக்கங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.