‘ரஜினியின் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை’ – விஜய் வசந்த் பேட்டி!

 

‘ரஜினியின் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை’ – விஜய் வசந்த் பேட்டி!

ரஜினிகாந்த் ஆரம்பிக்கவிருக்கும் கட்சிக்கு நேரம் சரியில்லை என நடிகர் விஜய் வசந்த் விமர்சித்துள்ளார்.

‘ரஜினியின் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை’ – விஜய் வசந்த் பேட்டி!

கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்திருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், ரத்த அழுத்தம் நேற்றைய விட இன்று கட்டுக்குள் வந்துள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் ரஜினிகாந்திற்கு முழு ஓய்வு தேவை என மருத்துவ குழு அறிவுறுத்தியுள்ளது. இது, அவரது கட்சி அறிவிப்பில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

‘ரஜினியின் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை’ – விஜய் வசந்த் பேட்டி!

இந்த நிலையில் மறைந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஜினி மற்றும் கமல் வரும் போது அவர்களை பார்க்க தான் கூட்டம் கூடுகிறது. அது ஓட்டாக மாற வாய்ப்பில்லை என்று கூறினார். மேலும், ரஜினி ஆரம்பிக்கவிருக்கும் கட்சிக்கு நேரம் சரியில்லை என்றும் விமர்சித்தார்.