இனி, இண்டெர்நெட் அல்லது டிவி இருந்தால்தான் படிப்பா?

 

இனி, இண்டெர்நெட் அல்லது டிவி இருந்தால்தான் படிப்பா?

ரயில்வே கிராஸிங் ஒன்றில் ரயில் செல்வதற்காக கேட் பூட்டப்பட்டிருக்கிறது. அதனால், காரிலிருந்த காமராசர் காத்திருக்கிறார். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

இனி, இண்டெர்நெட் அல்லது டிவி இருந்தால்தான் படிப்பா?

அங்கு ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்து, ‘ஏன் பள்ளிக்குப் போகல்?’ எனக் கேட்கிறார். ‘நான் பள்ளிக்கூடம் போய்ட்டா சாப்பாட்டுக்கு என்ன செய்யறது?’ என காமராசரைப் பார்த்து எதிர்கேள்வி கேட்கிறான். அப்போது அவர் மனதில் உதித்த திட்டம்தான் மதிய உணவுத் திட்டம். அதன்மூலம் லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளியை நோக்கி வந்தனர்.

இது தமிழகத்தின் கல்வி வரலாற்றில் முக்கியமான ஒரு  பகுதி. ஆனால், இன்று ஒரு மாணவருக்கு இண்டர்நெட் வசதியிருந்தால்தால் படிக்கவே முடியும் என்ற நிலை கொரோனாவால் வந்துவிட்டது.

இனி, இண்டெர்நெட் அல்லது டிவி இருந்தால்தான் படிப்பா?

இந்தியாவில் கொரோனாவின் ஆதிக்கம் கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்தது. அதனால் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. நாடே முடங்கியது. ஆயினும் கொரோனா தாக்கம் குறையவில்லை. மாறாக, புதிய நோயாளிகள் அதிகரித்தே வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதியை உத்தேசமாகக்கூடச் சொல்ல முடியவில்லை.

இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாகப் பாடம் நடத்தத் தொடங்கிவிட்டனர். இதையொட்டி அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை என்ன என்று கேள்வி எழுந்தது. அதனால் கல்வித் தொலைக்காட்சியில் பாடம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இனி, இண்டெர்நெட் அல்லது டிவி இருந்தால்தான் படிப்பா?

ஆக, இண்டர்நெட் வசதியுடன் மொபைல் போன் அல்லது கேபிள் வசதியுடன் டிவி இருந்தால் மட்டுமே இனி படிக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், இது தமிழகத்தின் அனைத்துக் குழந்தைகளுக்கும் சாத்தியம்தானா என்ற கேள்வி எழாமல் இல்லை.

மொபைல் வாங்கிக்கொடுக்க வில்லை என தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள், தாலியை விற்று டிவி வாங்கிய அம்மா… உள்ளிட்ட செய்திகளை நாம் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்.

இனி, இண்டெர்நெட் அல்லது டிவி இருந்தால்தான் படிப்பா?

திருவண்ணாமலை மாவட்டத்து ஜவ்வாதுமலை பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் மகாலட்சுமி, ‘இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு வர வழைப்பதே பெரிய விஷயம். ஏனெனில், அக்குழந்தைகளின் பெற்றோர்கள் வெளியூர்களில் காட்டு வேலைக்கு சென்றுவிடுவார்கள். இந்த நிலையில் அவர்கள் பள்ளிக்கு வருவதே பெரிய விஷயம். இந்நிலையில் ஆன்லைன் கல்வி, டிவி மூலம் கல்வி என்பதெல்லாம் எப்படி சாத்தியமாகும். இன்னும் சொல்லப்போனால், எங்கள் குழந்தைகளின் பல வீடுகளில் இன்னும் மின்சார இணைப்பே கொடுக்கப்படாமல்தான் இருக்கிறது” என்று பதிவு செய்கிறார்.

கல்வி என்பது எல்லோருக்குமானதுதானே… நகர்புறங்கள் மற்றும் வளர்ச்சியடைந்த கிராமங்களை மட்டும் மனதில் கொண்டு திட்டம் நிறைவேற்றுதல் சரியாக இருக்குமா என்பதே கல்வியாளர்களின் கேள்வி. அப்படியெனில், கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பள்ளிகளைத் திறப்பது ஆபத்தில் முடியும் எனும் வாதமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. அதையும் மனதில் கொண்டு புதிய வடிவில் கற்றல் முறையை இடைப்பட்ட காலத்தில் செய்வதே பொருத்தமாக இருக்க முடியும்.

இனி, இண்டெர்நெட் அல்லது டிவி இருந்தால்தான் படிப்பா?

பேராசிரியர் கல்விமணி நடத்தும் திண்டிவனம் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் வசிக்கும் இடத்திற்கே ஆசிரியர்கள் சென்று பத்து மாணவர்களை ஒருங்கிணைத்து நுண் வகுப்பறைகளை உருவாக்கி பாடம் நடத்துகிறார்கள். கதை சொல்கிறார்கள். பாடல்கள் பாடுகிறார்கள். இது ஒருவகையான முயற்சி.

இதுபோல உலகில் இம்மாதிரியான பேரிடர் காலத்தில் இந்தச் சூழலை எப்படி மேற்கொள்கிறார்கள்? கல்வி இடைநிற்றல் ஏற்படா வண்ணம் எப்படிப் பாதுகாக்கிறார்கள்? உள்ளிட்டவற்றை ஆராய குழு அமைக்கலாம். அக்குழு வழிகாட்டலின் படி பாடங்களைக் கற்பிப்பது, மாணவர்களைக் கையாள்வது எனும் முடிவை எடுக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எந்த வகையாகினும் நகர்புற, கிராமபுற, மலைவாழ் என அனைத்து வகை குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க உறுதி செய்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.