“லட்டு கொடுத்து துட்டு ஆட்டைய போட்டுட்டாங்களே!” -வாடகைக்கு வந்தவர்களிடம் பணத்தை பறிகொடுத்துவிட்டு புலம்பும் வீட்டு உரிமையாளர்..

“லட்டு கொடுத்து துட்டு ஆட்டைய போட்டுட்டாங்களே!” -வாடகைக்கு வந்தவர்களிடம் பணத்தை பறிகொடுத்துவிட்டு  புலம்பும் வீட்டு உரிமையாளர்..

ஹரியானா மாநிலம் குருகிராமில் அனுப் யாதவ் என்ற ஒரு வீட்டின் உரிமையாளர் தன்னுடைய வீட்டின் தரை தளத்தை இரண்டு வாலிபர்களுக்கு ஜூலை 27ம் தேதி வாடகைக்கு விட்டார்.அப்போது அவர்களின் அடையாள அட்டை போன்ற விவரங்களை பிறகு தருவதாக கூறி வீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளனர் .
இந்நிலையில் ஜூலை 29ம் தேதியன்று அவர்களில் ஒருவர் ஒரு தட்டு நிறைய லட்டுவை கொண்டு வந்து அனூப்பிடம் கொடுத்தார் .இதற்கு அனூப் என்ன விசேஷம் என்று கேட்டபோது ,தனக்கு பிறந்த நாள் என்று அவர் கூறியுள்ளார் .அதை உண்மையென நம்பிய அனூப் அவர் கொடுத்த லட்டை எடுத்து தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு பகிர்ந்து சாப்பிட்டார் .

“லட்டு கொடுத்து துட்டு ஆட்டைய போட்டுட்டாங்களே!” -வாடகைக்கு வந்தவர்களிடம் பணத்தை பறிகொடுத்துவிட்டு  புலம்பும் வீட்டு உரிமையாளர்..
அந்த லட்டை சாப்பிட்ட பிறகு குடும்பத்தினர் அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர் .மயங்கிய அவர்கள் மறுநாள் காலையில்தான் எழுந்துள்ளனர் .அவர்கள் மயக்கம் தெளிந்து பார்த்த போது வீட்டிலிருந்த நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அனூப் அதிர்ச்சியடைந்தார் .இதனால் அனூப் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய வீட்டில் குடியிருந்த அந்த நபர்கள் மீது புகாரளித்தார் .
அவர்களின் புகாரினை பெற்ற போலிசார் நடத்திய விசாரணையில், அந்த இருவரும் 17,500ரூபாய் ரொக்கம், இரண்டு மொபைல் போன்கள், நகைகள் மற்றும் அனூப்பின் டெபிட் / கிரெடிட் கார்டுகளுடன் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“லட்டு கொடுத்து துட்டு ஆட்டைய போட்டுட்டாங்களே!” -வாடகைக்கு வந்தவர்களிடம் பணத்தை பறிகொடுத்துவிட்டு  புலம்பும் வீட்டு உரிமையாளர்..