திருச்சி ஜி-கார்னர் தற்காலிக சந்தையை காலி செய்ய நோட்டீஸ்!

 

திருச்சி ஜி-கார்னர் தற்காலிக சந்தையை காலி செய்ய நோட்டீஸ்!

திருச்சி ஜி-கார்னரில் செயல்படும் தற்காலிக காய்கறி சந்தையை காலி செய்ய ரயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருச்சி ஜி-கார்னர் தற்காலிக சந்தையை காலி செய்ய நோட்டீஸ்!

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட், திருச்சி காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பல மார்கெட்டுகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து மக்களின் நிலையை கருத்தில் கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பதிலாக திருமழிசையிலும், காந்தி மார்க்கெட்டுக்கு பதிலாக ஜி-கார்னர் பகுதியிலும் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது.

திருச்சி ஜி-கார்னர் தற்காலிக சந்தையை காலி செய்ய நோட்டீஸ்!

தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வந்தாலும் கூட காந்தி மார்க்கெட்டை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. அதனால், ஜி-கார்னர் தற்காலிக சந்தை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜி-கார்னர் தற்காலிக சந்தையை காலி செய்யுமாறு ரயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அக்.31க்குள் காலி செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட நிர்வாகத்துக்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் நவ.1 முதல் தற்காலிக சந்தை செயல்படுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.