கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்… மாநகராட்சியிடம் விளக்கம் கேட்ட மனித உரிமை ஆணையம்

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்… மாநகராட்சியிடம் விளக்கம் கேட்ட மனித உரிமை ஆணையம்

கவுதமி வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு பதில் கமல்ஹாசனின் இல்லத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டியது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்… மாநகராட்சியிடம் விளக்கம் கேட்ட மனித உரிமை ஆணையம்கொரோனா பரவல் ஆரம்பித்த நேரத்தில் நடிகர் கமலின் எல்டாம்ஸ் சாலை இல்லத்தின் வாசலில் மாநகராட்சி ஊழியர்கள் வந்து நோட்டீஸ் ஒன்றை ஒட்டினர். அதில், கொரோனாவில் இருந்து எங்களையும் சென்னையையும் காக்க நாங்கள் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமல் வெளிநாடுகளுக்கு சென்று வரக்கூடியவர் என்பதால் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதை முன்னணி ஊடகங்கள் அனைத்தும் செய்தியாக்கின.

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்… மாநகராட்சியிடம் விளக்கம் கேட்ட மனித உரிமை ஆணையம்
இதைத் தொடர்ந்து கமல் தரப்பிலிருந்து எங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை, நாங்கள் வெளிநாடு எதுவும் சென்று வரவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் விசாரணையில் நடிகை கவுதமி சமீபகாலத்தில் வெளிநாடு சென்று வந்தார் என்றும். பாஸ்போர்ட் முகவரி அடிப்படையில் கமல் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த போஸ்டர் அகற்றப்பட்டது.

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம்… மாநகராட்சியிடம் விளக்கம் கேட்ட மனித உரிமை ஆணையம்
இது குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கமல் வீட்டில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டியது ஏன் என்று நான்கு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.