இழப்பீடு தொகையை வசூலிக்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் அறிவிப்பு

இழப்பீடு தொகையை வசூலிக்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்து இழப்பீட்டு தொகையை வசூலித்துத் தர கோரி, மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு தொகையை வசூலிக்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஓட்டக்கோவில்பட்டியை சேர்ந்த கந்தசாமி என்பவர், கடந்த 2004 ஆம் ஆண்டு கிணறுவெட்டும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, கை மற்றும் கால்கள் செயலற்று போயின. விபத்து தொடர்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலாளர் நல ஆணையம், இழப்பீட்டு தொகையை கிணற்றின் உரிமையாளரிடம் வசூல்செய்து வழங்க வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், உத்தரவு பிறப்பித்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் இழப்பீடு முழுமையாக வசூல்செய்து வழங்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளி கந்தசாமிக்கு உரிய இழப்பீட்டு தொகையை வசூல் செய்துதர வலியுறுத்தி கன்னிவாடி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இழப்பீடு தொகையை வசூலிக்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் அறிவிப்பு