இசைக்கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

 

இசைக்கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்றுக்காரணமாக மார்ச் மாத இறுதியிலிருந்து லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. அது இப்போது வரை நான்கு மாதங்களாக நீடிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன

இந்நிலையில் இம்மாதம் 16 –ம் தேதியிலிருந்து தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தற்போது தமிழ்நாடு இசைக்கல்லூரியில் விண்ணபிக்கும் அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இசைக்கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

தமிழ்நாடு இசைக்கல்லூரி சென்னை, திருவையாறு, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு இடங்களில் உள்ளன. வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், தவில், நாதஸ்வர், கடம், கஞ்சிரா, பரதநாட்டியம், மோர்சிங், கிராம்மியக் கலை ஆகியவை இரண்டு ஆண்டுகள் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளாக நடத்தப்படுகின்றன. இசை ஆசிரியருக்கான ஓராண்டு பட்டயப் படிப்பும் உள்ளது.

இசைக்கல்லூரியில் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

திருவையாற்றில் உள்ள தமிழ்நாடு இசைக்கல்லூரியில் மட்டும் கலையியல் இளையர் (B.Music) முதுகலை (M.Music) இசைப் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.  முனைவர் ஆய்வுக்கான படிப்பும் இக்கல்லூரியில் உள்ளது.

இந்தப் படிப்புக்கு நாளை முதல் (ஜூலை 27) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.