ஆன்லைன் இல்லை… டி.வி மூலமாகவே பாடம் நடத்தப்படும்! – ஒரே நாளில் மாற்றிய செங்கோட்டையன்

 

ஆன்லைன் இல்லை… டி.வி மூலமாகவே பாடம் நடத்தப்படும்! – ஒரே நாளில் மாற்றிய செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்படாது, அதற்கு பதில் தொலைக்காட்சி மூலமாக பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் இல்லை… டி.வி மூலமாகவே பாடம் நடத்தப்படும்! – ஒரே நாளில் மாற்றிய செங்கோட்டையன்தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளைக்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. மேல் வகுப்புக்கு நடத்தினால் போதுமானது என்ற நிலையில் ப்ரீகேஜிக்கும் ஆன்லைன் வகுப்பு என்று அவர்கள் செய்யும் அட்டகாசத்தை தடுத்து நிறுத்த ஒருவரும் இல்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 15ம் தேதிக்குள் இது தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் இல்லை… டி.வி மூலமாகவே பாடம் நடத்தப்படும்! – ஒரே நாளில் மாற்றிய செங்கோட்டையன்இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றார். இது தனியார் பள்ளிகளை உற்சாகம் அடையச் செய்தது. அரசே ஆன்லைன் வகுப்பு நடத்தும்போது, நாம் ஏன் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று சந்தோஷப்பட்டன. ஸ்மார்ட் போன், இணைய வசதி இல்லாத கிராமத்து மாணவர்கள் எப்படி ஸ்மார்ட் போன் வழியாக கல்வி கற்பார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது. டி.வி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை நடத்த மூன்று தொலைக்காட்சிகள் தயாராக உள்ளன” என்றார்.

ஆன்லைன் இல்லை… டி.வி மூலமாகவே பாடம் நடத்தப்படும்! – ஒரே நாளில் மாற்றிய செங்கோட்டையன்மேலும் அவர் கூறுகையில், “2-ம் வகுப்பில் மீதமுள்ள ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது. 12-ம் வகுப்பில் கடைசித் தேர்வு எழுதாதவர்கள் எப்படி தேர்ச்சியடைய செய்ய முடியும். மீதமுள்ள பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும். கடைசித் தேர்வை எழுத 718 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிக்காத 34,812 மாணவர்களும் விரும்பினால் அவர்களும் தேர்வு எழுதலாம்” என்றார்.