” மணி பார்க்க மட்டுமில்ல – ”மணி” கொடுக்கவும் வாட்ச் ” – பணம் செலுத்தும் கை கடிகாரங்கள் டைட்டன் அறிமுகம்

கடைகளில் காசு கொடுக்க இனி கைக் கடிகாரமே போதும். இத்தகைய சிறப்பு அம்சம் பொருந்திய ஸ்மார்ட் கைகடிகாரங்களை டைட்டன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

” மணி பார்க்க மட்டுமில்ல  – ”மணி” கொடுக்கவும் வாட்ச் ” – பணம் செலுத்தும் கை கடிகாரங்கள் டைட்டன் அறிமுகம்

டைட்டன் பே என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாக, 2 ஆயிரம் ரூபாய் வரை கார்டு பின் அளிக்காமலே பணம் செலுத்தலாம். இந்த வசதிக்காக எஸ்பிஐ வங்கியுடன் டைட்டன் கூட்டு சேர்ந்துள்ளது. இதனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த வாட்சின் மூலம் இந்த பணபரிவர்த்தனை வசதியை பெற முடியும்.

” மணி பார்க்க மட்டுமில்ல  – ”மணி” கொடுக்கவும் வாட்ச் ” – பணம் செலுத்தும் கை கடிகாரங்கள் டைட்டன் அறிமுகம்

இதற்காக இந்த வாட்சில் என்ஃஎப்சி எனப்படும் சிப் பொருத்தப்பட்டுள்ளது. கான்டாக்ட்லெஸ் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி கொண்ட அனைத்து கடைகளிலும் இந்த வாட்சை பயன்படுத்தி 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

” மணி பார்க்க மட்டுமில்ல  – ”மணி” கொடுக்கவும் வாட்ச் ” – பணம் செலுத்தும் கை கடிகாரங்கள் டைட்டன் அறிமுகம்

இருபாலருக்கும் மொத்தம் 5 வகைகளில் அறிமுகமாகி உள்ள இந்த கைகடிகாரம், 2,995 ரூபாய் என்ற விலையில் தொடங்குகிறது.

-எஸ்.முத்துக்குமார்