ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் மட்டுமல்ல, புதிய மாடல் மொபைல்போன்களின் அறிமுகம் தாமதமாகும்.. சந்தை வட்டாரங்கள் தகவல்

ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் மட்டுமல்ல, புதிய மாடல் மொபைல்போன்களின் அறிமுகம் தாமதமாகும்.. சந்தை வட்டாரங்கள் தகவல்

ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் மட்டுமல்ல பல நிறுவனங்களின் புதிய மாடல் மொபைல்போன்களின் அறிமுகம் தாமதமாகும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனான ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை உருவாக்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலில் ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை விநாயகர் சதுர்த்தி தினத்தில் துவங்கும் என அறிவித்து இருந்தது. ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் போன் விற்பனைக்கு வரவில்லை.

ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் மட்டுமல்ல, புதிய மாடல் மொபைல்போன்களின் அறிமுகம் தாமதமாகும்.. சந்தை வட்டாரங்கள் தகவல்
செல்போன்கள்

இது ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் செல்போனை வாங்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில், ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் மட்டுமல்ல பல நிறுவனங்களின் புதிய மாடல் மொபைல்போன்களின் அறிமுகம் தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உதிரி பாகங்கள் விலை உயர்வை தவிர்த்து, செல்போன்களின் உதிரிபாகங்களுக்கு கடும் பற்றாக்குறை அல்லது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் மாடல் மட்டுமல்ல, புதிய மாடல் மொபைல்போன்களின் அறிமுகம் தாமதமாகும்.. சந்தை வட்டாரங்கள் தகவல்
செல்போன் உதிரி பாகங்கள்

மேலும், ஷிப்பிங் (உதிரிபாகங்கள் இறக்குமதி) தாமதங்கள் காரணமாக பல செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி சிக்கலை எதிர்க்கொண்டுள்ளன. இதனால்தான் பல முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் செல்போன்களை சந்தையில் களம் இறக்குவதை தாமதப்படுத்தி வருகின்றன. இதனால் சிறிது காலத்துக்கு சந்தையில் புதிய மாடல்கள் செல்போன்கள் அறிமுக வாய்ப்பில்லை என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.