• August
    21
    Wednesday

Main Area

Main



'உங்கள் வீட்டு கழிவறையைச் சுத்தம் செய்ய நான் எம்பி ஆகவில்லை': தொண்டரிடம் எகிறிய பாஜக எம்பி!

பிரக்யா சிங் தாக்கூர்
பிரக்யா சிங் தாக்கூர்
Loading...

போபால் : உங்கள் வீட்டு கழிவறையைச் சுத்தம் செய்ய நான்  எம்பி ஆகவில்லை  என்று பேசிய பிரக்யா சிங் தாக்கூர் பேச்சிற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

Pragya Singh Thakur

மத்திய பிரதேசத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக வெற்றி பெற்றவர்  பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்கூர். சர்ச்சைக்குப் பெயர் போன இவரிடம்  பாஜக தொண்டர் ஒருவர், செஹோர் பகுதி சுகாதாரமற்று இருக்கிறது என்று புகார் தெரிவித்தார். அதற்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரக்யா தாக்கூர், உங்கள் வீட்டு கழிவறையை சுத்தம் செய்ய நான்  எம்பி ஆகவில்லை. அதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ஒரு எம்.பி-யாக, உள்ளூர் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களோடு இணைந்து தொகுதியின் மேம்பாட்டுக்காகப் பணி வேண்டும்' என்றார்.

nadda

இந்நிலையில்  இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட பிரக்யா தாக்கூரை பாஜக செயல் தலைவர் நட்டா கண்டித்ததாகத் தெரிகிறது. மேலும் இனிவரும் காலங்களில்  கட்சிக்கு எதிராக மக்களை திசை திருப்பும் வகையிலான பேச்சுக்களைத் தவிர்க்குமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.