கொரோனா விதிமுறையை மீறிய பிரதமருக்கு அபராதம் – அதிரடி காட்டிய காவல் துறை!

கொரோனா விதிமுறையை மீறிய பிரதமருக்கு அபராதம் – அதிரடி காட்டிய காவல் துறை!

கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்குக்கு இந்திய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு காவல் துறை உயர் அதிகாரி ஓலே சாவெருட் உறுதிசெய்துள்ளார்.

கொரோனா விதிமுறையை மீறிய பிரதமருக்கு அபராதம் – அதிரடி காட்டிய காவல் துறை!

நார்வே நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவி வகித்து வருகிறார் எர்னா சோல்பெர்க். இவர் கடந்த மாதம் தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதை முன்னிட்டு உணவகம் ஒன்றில் தனது குடும்ப உறுப்பினர்கள் 13 பேருக்கு விருந்து வைத்தார். நார்வே நாட்டின் விதிமுறையின்படி, பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடினால் அது சட்டவிரோதம். இந்த விதிமுறையை அவர் மீறிவிட்டதால் காவல் துறை அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

கொரோனா விதிமுறையை மீறிய பிரதமருக்கு அபராதம் – அதிரடி காட்டிய காவல் துறை!

இதுதொடர்பாக காவல் அதிகாரி ஓலே கூறுகையில், “சட்டம் என்பது நாட்டிலுள்ள அனைவருக்கும் பொருந்தும். சட்டத்திற்கு முன் பிரதமரும் மக்களும் வேறு வேறானவர்கள் அல்ல. ஒரு பிரதமராக அவர் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மக்களுக்கு முன்னுதராணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரே விதிகளை மீறியிருக்கிறார். அதனால் அபராதம் விதிக்கப்படுகிறது” என்றார்.