கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமார் சஸ்பெண்ட் – வடக்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை!

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமார் சஸ்பெண்ட் – வடக்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை!

டெல்லியில் சத்ராசல் அரங்கில் கடந்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி மூத்த மல்யுத்த வீரர்களும் இளம் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில இளம் மல்யுத்த வீரர்கள் குமார், அஜய், பிரின்ஸ், அமீத், சாகர் குமார் ஆகிய 5 வீரர்களுடன், சுஷில் குமார் உள்ளிட்ட மூத்த வீரர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டனர். அந்த மோதலில் பலந்த காயமடைந்த சாகர் குமார் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சோனு மகால், ஆமீத் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமார் சஸ்பெண்ட் – வடக்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை!

இந்தச் சம்பவத்தில் மூத்த வீரர்கள் பலர் மீது டெல்லி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் பிரபல மல்யுத்த வீரரான சுஷில்குமாரும் ஒருவர். இந்தச் சம்பவத்திற்கு பின்பு அவர் தலைமறைவனார். இவரைப் பிடிக்க டெல்லி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் சுஷில்குமாரும் அவரது கூட்டாளி அஜய்யும் கடந்த 23ஆம் தேதி டெல்லியின் முண்ட்கா பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமார் சஸ்பெண்ட் – வடக்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை!

தற்போது சுஷில்குமார் கைதுசெய்யப்பட்டதையடுத்து அவரைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்து வடக்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. வடக்கு ரயில்வேயின் மூத்த வணிக மேலாளரான சுஷில் குமார், 2015ஆம் ஆண்டிலிருந்து டெல்லி அரசின் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார். அப்போது பள்ளி அளவில் விளையாட்டை மேம்படுத்த சத்ராசல் அரங்கில் சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டு அவரது சிறப்பு பிரதிநிதித்துவம் நீட்டிக்கப்பட்டது.

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமார் சஸ்பெண்ட் – வடக்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை!

2021ஆம் ஆண்டு தனது பிரதிநிதித்துவத்தை நீட்டிக்க விண்ணப்பித்திருந்தார். ஆனால் டெல்லி அரசு அதனை நிராகரித்ததால், மீண்டும் வடக்கு ரயில்வே பதவிக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அரசு அதிகாரிகள் ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அவர் வழக்கு விசாரணை நடைபெறும்வரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யபடுவார் என வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் தெரிவித்தார்.