வெல்டிங் மெஷினால் உடைப்பு… பற்றி எரிந்த ஏடிஎம்… சாம்பலான 2.50 லட்சம் ரூபாய்!-நாமக்கல்லில் வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம்

வெல்டிங் மெஷினால் உடைப்பு… பற்றி எரிந்த ஏடிஎம்… சாம்பலான 2.50 லட்சம் ரூபாய்!-நாமக்கல்லில் வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம்

நாமக்கல்லில் ஏடிஎம் மையத்தை வெல்டிங் மெஷின் வைத்து உடைத்தபோது தீப்பற்றி எரிந்தது. இதில் ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த 2.50 லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலானது. வட மாநில கொள்ளையர்கள் நடத்திய இந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே தனியார் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் நுழைவுவாயிலில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் எந்திரம் கடந்த 5ம் தேதி அதிகாலையில் எரிந்து கிடந்தது. ஏடிஎம் எந்திரத்தை வெல்டிங் மெஷினை வைத்து உடைக்க முயன்றுள்ளனர். அப்போது, எந்திரத்தில் தீப்பிடித்தது. இதில் ஏடிஎம்மில் இருந்த 2.50 லட்சம் பணம் தீயில் கருகியது.

வெல்டிங் மெஷினால் உடைப்பு… பற்றி எரிந்த ஏடிஎம்… சாம்பலான 2.50 லட்சம் ரூபாய்!-நாமக்கல்லில் வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம்

இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், சேலம்- நாமக்கல் தேசிய நெஞ்சாலையில் பாச்சல் பிரிவு அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சேலத்தில் இருந்து நாமக்கல்லை நோக்கி வந்து கொண்டிருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். அப்போது, லாரியில் இருந்து ஓட்டுநர் உட்பட 3 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

வெல்டிங் மெஷினால் உடைப்பு… பற்றி எரிந்த ஏடிஎம்… சாம்பலான 2.50 லட்சம் ரூபாய்!-நாமக்கல்லில் வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம்

இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஏடிஎம் கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டதும், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சைகுல், முகமது சராபத், முகமது ஜினீத் என்பதும் தெரியவந்தது. இவர்கள் சரக்கு ஏற்றிச் செல்ல ஒவ்வொரு முறையும் வந்து செல்லும் போதும் ஆள்நடமாட்டம் இல்லாத ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சம்பவத்தன்று மதுரைக்கு வந்த கொள்ளையர்கள், ஆந்திரா செல்லும் வழியில் புதுச்சத்திரத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது, வெல்டிங் மெஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டு வைத்து உடைத்துள்ளனர். அப்போது, ஏற்பட்ட தீயால் ஏடிஎம் எந்திரம் எரிந்துள்ளது. இந்த மூன்று பேரும் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.