வடகிழக்கு பருவமழை : முதலமைச்சர் இன்று ஆலோசனை!

 

வடகிழக்கு பருவமழை  : முதலமைச்சர் இன்று ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

வடகிழக்கு பருவமழை  : முதலமைச்சர் இன்று ஆலோசனை!

தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல் போன்ற புயல்கள் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் நீர் புகுவதும், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

வடகிழக்கு பருவமழை  : முதலமைச்சர் இன்று ஆலோசனை!

இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகள் அடைப்பு எடுக்கப்பட்டும் , வடகிழக்கு பருவமழை முன்பதாகவே ஏரிகள், நீர்நிலைகள் தூர்வாரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது . தமிழக வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவீதம் வரை கிடைக்கிறது. இதை வீணாக்காமல் சேமிக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வடகிழக்கு பருவமழை  : முதலமைச்சர் இன்று ஆலோசனை!

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஎடுப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.