வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்

வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்

மர்மம் நிறைந்த மனிதராகவே விளங்குகிறார் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்.

கடந்த சில மாதங்களாக கிம் ஜங் உன் கலந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகவில்லை என்பதால், அவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா இருப்பதாக செய்திகள் மீண்டும் உலா வந்தன. இந்தச் செய்தியை கி, ஜங் உன்னின் நெருங்கிய நட்பு வட்டமும் உறுதி செய்தி செய்தது. ஆனால், மீண்டும் அவர் இயல்பாக இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியாயின.

வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்

கிம் ஜங் உன் இறந்துவிட்டார் என்று செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் இதில் உண்மை இருக்கும் என அடித்துச் சொல்கிறார். வட கொரிய அதிபருக்கு கடுமையாக உடல்நலம் இல்லாத சூழலில்தான் அதிகாரங்கள் கைமாற்றப்படும்.

சில மாதங்களுக்கு முன் வட கொரிய அதிரிபரின் அதிகாரங்கள் பலவற்றை அவரின் சகோதரி கிம்யோ ஜாங் -க்கு மாற்றியதை வைத்து அந்தப் பத்திரிகையாளர் கிம் ஜங் உன் இறந்துவிட்டார் என்ற முடிவுக்கு வருகிறார்.

வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்

ஆனாலும், சில வாரங்களுக்கு முன் புயலால் அடைந்த சேதத்தைப் பார்வையிட கிம் ஜ்ங் உன் வெளிவந்த போட்டோக்கள் மீடியாக்களில் பகிரப்பட்டன.

வடகொரியாவில் வந்த வெள்ளத்தால் பல பகுதிகளில் மக்கள் சிக்கிக்கொண்டனர். ஹவாங்கே (Hwanghae) எனும் பகுதி அதிகளவில் விவசாயம் செய்யப்படும் பகுதி.

வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட்டார் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்

இந்தப் பகுதியில் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட கிம் ஜங் உன் இன்று வந்தார். அதன் படங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.  வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கிம் உற்சாகமாக எல்லோரிடம் பேசுவது வேகமாக நடப்பதுமான காட்சிகள் உள்ளன.