சிக்னல் கம்பம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்… சாதுர்யமாக மீட்ட போலீசார்…

 

சிக்னல் கம்பம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்… சாதுர்யமாக மீட்ட போலீசார்…

திருப்பூர்

பல்லடத்தில் போக்குவரத்து சிக்னல் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதிக்கு நேற்று வந்த வடமாநில இளைஞர் ஒருவர் திடீரென, கம்பத்தின் மீது ஏறி தலைகீழாக தொங்கிய படி தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து, கம்பத்தில் தொங்கிய அந்த இளைஞரை சமாதானம் செய்து இறக்க முயன்றனர். ஆனால், இளைஞர் கீழே இறங்க மறுத்து விட்டார். இந்த நிலையில், அந்த வழியாக வந்த லாரியை போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் அருகே நிறுத்திய போலீசார், அந்த இளைஞரை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சிக்னல் கம்பம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்… சாதுர்யமாக மீட்ட போலீசார்…

அப்போது, அவர் பீகாரை சேர்ந்த காகேஸ்வர் பெகரா என்பதும், கல்குவாரியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்ததும் தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு காகேஸ்வரை மர்ம நபர்கள் தாக்கி, அவரது செல்போன் மற்றும் ஓட்டுநர் பறித்துச் சென்றுள்ளனர். , திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது ஓட்டுநர் உரிமத்தை மீட்டுத் தரக்கோரி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, போலீசார் அவரை மீண்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.