வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்த, எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்- வேலூர் எஸ்.பி., அதிரடி!

 

வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்த, எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்- வேலூர் எஸ்.பி., அதிரடி!

வேலூர்

காட்பாடி விருதம்பட்டு பகுதியில் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்த காவல் உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, வேலூர் மாவட்ட எஸ்.பி., செல்வகுமார் உத்தரவிட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ஆதர்ஷ். இவர் மீது ஊரடங்கு காலத்திலும் சாலையோர வியாபாரிகளிடமும், தள்ளுவண்டி வியாபாரிகளிடமும் மாமூல் வசூலித்ததாக புகார்கள் எழுந்தன. அதன் பேரில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், ரகசிய விசாரணை நடத்தினார்.

வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்த, எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்- வேலூர் எஸ்.பி., அதிரடி!

விசாரணையில், உதவி ஆய்வாளார் ஆதர்ஷ், வியாபாரிகளிடம் மாமூல் வசூலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷை, மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. செல்வகுமார் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனிடையே, ஆதர்ஷ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்திய வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரின் பேரில், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.