மெக்ரத் பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவரும் இல்லை – பட்டியல் விவரம்!

 

மெக்ரத் பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவரும் இல்லை – பட்டியல் விவரம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எப்போதுமே சவால் மிகுந்த வீரர்களைக் கொண்ட அணி. இல்லையெனில், 5 முறை உலகக் கோப்பையை வென்றிருக்க முடியாது. அதுவும் மூன்று முறை தொடர்ந்து வென்றது என்பது குறிப்பிடத்தகது.

ஆஸ்திரேலிய பவுலர்களில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சத்தைத் தரும் அளவுக்கு பந்து வீசக்கூடியவர் மெக்ரத். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 1993 -ம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை விளையாடியவர். மூன்று உலககோப்பைகளில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடியவர். அவற்றில் இரண்டு முறை ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. ஒருமுறை இறுதிப்போட்டிக்குச் சென்றது. இதற்கு மெக்ரத்தின் பந்துவீச்சு உதவியாக இருந்தது என்றே சொல்லலாம்.

மெக்ரத் பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவரும் இல்லை – பட்டியல் விவரம்!

மெக்ரத் டெஸ்ட் போட்டிகளில் 563 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 381 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். அவர் ஆடியகாலத்தில் டி20 போட்டிகள் அறிமுகமாக வில்லை.

மெக்ரத் சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் தனக்குப் பிடித்த பவுலர்களில் டாப் 5 பேரைப் பட்டியலிட்டு வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் இருக்கிறார். அவர் 502 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

மெக்ரத் பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவரும் இல்லை – பட்டியல் விவரம்!

இரண்டாம் இடத்தை இலங்கையின் முத்தையா முரளிதரனுக்கு அளித்திருக்கிறார். முரளிதரன் 534 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.

மூன்றாம் இடம் ஆஸ்திரேலியா வீரர் பிரெட் லீக்கு. இவர் 380 விக்கெட்டுகளைச் சாய்த்திருக்கிறார். நான்காம் இடம், இலங்கையின் சமந்தா வாஸ்க்கு. இவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

மெக்ரத் பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவரும் இல்லை – பட்டியல் விவரம்!

ஐந்தாம் இடம் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேட்பன் ஷேன் பொல்லாக் பிடித்திருக்கிறார். இவர் 393 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

மெக்ரத்தின் பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. மேலும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த் ஷேன் வார்னே பெயர் இல்லாதது பெருங்குறை என்றும் விமர்சனம் செய்கின்றனர்.