”சீனா சாரா வர்த்தகம் – உள்நாட்டு உற்பத்தி ஊக்கத்திட்டம்” 23 பில்லியன் டாலரில் மத்திய அரசு புதிய திட்டம்?

 

”சீனா சாரா வர்த்தகம் – உள்நாட்டு உற்பத்தி ஊக்கத்திட்டம்” 23 பில்லியன் டாலரில் மத்திய அரசு புதிய திட்டம்?

சீனாவை சாராத வர்த்தகத்தை மேற்கொள்ளவும், உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக நிறுவனங்களை கவர 23 பில்லியன் டாலர் ( 2300 கோடி டாலர்) மதிப்பிலான ஊக்கதொகை திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில், சீனாவில் இருந்து 65 பில்லியன் டாலருக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 17 பில்லியன் டாலர் அளவுக்குத் தான் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வர்த்தக பற்றாக்குறை 48 பில்லியன் டாலராகும். இதனால் சீனாவில் இருந்து இறக்குமதியை குறைத்து, இந்தியாவிலேயே உற்பத்தியை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

”சீனா சாரா வர்த்தகம் – உள்நாட்டு உற்பத்தி ஊக்கத்திட்டம்” 23 பில்லியன் டாலரில் மத்திய அரசு புதிய திட்டம்?

அதன்படி, உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 23 பில்லியன் டாலர் மதிப்பில் பல்வேறு துறை சார்ந்த ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளை ஏற்படுத்தி தர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த உற்பத்தி சார் ஊக்கத்திட்டத்தின் கீழ், வாகன உற்பத்தியாளர்கள், சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனங்கள், நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனங்கள், ஜவுளி, மருந்து உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் ஆகியவை பயன்பெறும் என தெரிகிறது.

மேலும், உள்நாட்டில் தயாராகும் உற்பத்திசார் பொருட்களை படிப்படியாக தங்கள் உற்பத்தி பொருட்களில் சேர்ப்பதை அதிகரிக்க பல கட்ட உற்பத்தி திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்சமயம் செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் உற்பத்தியானது, இந்த திட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் பர்னிச்சர், பிளாஸ்டிக்ஸ், பொம்மை தயாரிப்பு மற்றும் குறைந்த மதிப்புள்ள நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தியையும் இதே திட்டத்தின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரும்பாலான இந்த பொருட்கள் சீனாவில் இருந்து தான் இறக்குமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.