இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த ஜப்பான் நிறுவனம்.. காரணம் லாக்டவுன் தாங்க.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த ஜப்பான் நிறுவனம்.. காரணம் லாக்டவுன் தாங்க.

லாக்டவுன் காரணமாக இந்தியாவின் இந்த நிதியாண்டுக்காக பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை நொமுரா நிறுவனம் குறைத்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுனை அமல்படுத்தப்பட்டது. லாக்டவுன் காலத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள் அடைப்பட்டு கிடந்தனர், பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இதனால் 2020-21ம் நிதியாண்டில் நம் நாட்டின் பொருளாதாரத்தில் 7.6 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த ஜப்பான் நிறுவனம்.. காரணம் லாக்டவுன் தாங்க.
லாக்டவுன்

இந்த சூழ்நிலையில் தற்போது நம் நாடு மீண்டும் ஒரு லாக்டவுனை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸின் பரிமாற்ற சங்கிலியை உடைக்கும் நோக்கில் பெரும்பாலான மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. மேலும் பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்த வண்ணம் உள்ளன. இது நம் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை எற்படுத்தும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த ஜப்பான் நிறுவனம்.. காரணம் லாக்டவுன் தாங்க.
ஜி.டி.பி.

இதனை நொமுரா நிறுவனத்தின் அறிக்கை உறுதி செய்கிறது. ஜப்பானை தரகு நிறுவனமான நொமுரா, லாக்டவுன் காரணமாக இந்த நிதியாண்டுக்கான (2021-22) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தனது மதிப்பீட்டை 10.8 சதவீதமாக குறைத்துள்ளது. அண்மையில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 12.6 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என கணித்து இருந்தது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் உள்ளூர்மயமாக்கப்பட்ட பாதிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.