நியமனம் எம்.பி-க்கள் சொத்துக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது இல்லை! – மாநிலங்களவை அதிர்ச்சி தகவல்

 

நியமனம் எம்.பி-க்கள் சொத்துக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது இல்லை! – மாநிலங்களவை அதிர்ச்சி தகவல்

குடியரசுத் தலைவர் நியமனம் செய்த எம்.பி-க்கள் தங்களின் சொத்துக்கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை என்று மாநிலங்களவை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியமனம் எம்.பி-க்கள் சொத்துக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது இல்லை! – மாநிலங்களவை அதிர்ச்சி தகவல்இந்திய நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் உறுப்பினர்களாக இருக்கிற மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி. இதன் அடிப்படையில் குடியரசு தலைவர் நியமனம் செய்த சுப்பிரமணியன் சுவாமி, மேரி கோம், ரூபா கங்குலி உள்ளிட்ட எம்.பி-க்களின் சொத்து விவரங்களைக் கேட்டு சாகித் கோக்கலே என்ற ஆர்.டி.ஐ ஆர்வலர் மாநிலங்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார்.

நியமனம் எம்.பி-க்கள் சொத்துக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது இல்லை! – மாநிலங்களவை அதிர்ச்சி தகவல்இதற்கு மாநிலங்களவை தேர்வுக் குழு பதில் அனுப்பியுள்ளது. அதில், மாநிலங்களை உறுப்பினர்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தாங்கள் கேட்ட உறுப்பினர்கள் எல்லோரும் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் தன், தங்களுடைய குடும்பத்தினரை சொத்துக்கணக்கை தாக்கல் செய்வது பொருந்தாது” என்று கூறியுள்ளது.
மாநிலங்களவையில் தேர்வு செய்யப்படும் 233 பேருக்கு ஒரு சட்டம், நியமனம் செய்யப்படும் 12 பேருக்கு ஒரு சட்டமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.