’சேலத்து தங்கமகன்’ மாரியப்பன் தேசிய விருதுக்கு பரிந்துரை 

 

 ’சேலத்து தங்கமகன்’ மாரியப்பன் தேசிய விருதுக்கு பரிந்துரை 

போராடும் குணமும் அதற்கான முயற்சியும் இருந்தால் எதுவும் நம் வெற்றிக்குத் தடையில்லை என்று உலகிற்கு நிருபித்தவர் மாரியப்பன் தங்கவேலு.

சேலத்தைச் சேர்த்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன் 2016 ஆம் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார். அவரின் வெற்றி மாற்றுத்திறனாளிகள் எல்லோருக்கும் உத்வேகத்தை அளித்தது.

 ’சேலத்து தங்கமகன்’ மாரியப்பன் தேசிய விருதுக்கு பரிந்துரை 

இத்தனைக்கும் மாரியப்பன் மிக மிக எளிய பொருளாதார பின்புலம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். பயிற்சிக்கும் பயணத்திற்கும் தேவைப்படும் பணத்தை பெரும் சிரமத்துடன் ஈடு செய்தார்.

மாரியப்பன் தங்கவேலுவின் பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்திருக்கிறது விளையாடு சம்மேளனம். இந்தப் பரிந்துரையே மாபெறும் வெற்றியாகவே பார்க்க வேண்டும்.

 ’சேலத்து தங்கமகன்’ மாரியப்பன் தேசிய விருதுக்கு பரிந்துரை 

இந்திய அரசு, விளையாட்டுத் துறையில் சாதிக்கும் சிறப்பான வீர்ர்களுக்கு விருதுகள் அளித்து கெளரவிக்கும். எந்தத் துறையில் எந்த வீரருக்கு வழங்கலாம் என்பதை அந்த விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரைப்பது வழக்கம்.

மத்திய அரசு விளையாட்டுக்கு வழங்கும் விருதுகளில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மிக உயரிய விருதாக மதிப்படும். அவ்விருதுக்கே மாரியப்பன் தங்கவேலு பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

 ’சேலத்து தங்கமகன்’ மாரியப்பன் தேசிய விருதுக்கு பரிந்துரை 

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான இந்த ஆண்டின் பரிந்துரையாக, மாரியப்பன் தங்கவேலுவுடன், அதிரடி கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, துப்பாக்கிச் சுடும் போட்டியில் அசத்தி வரும் அஞ்சும் மோட்ஜில், ஈட்டி எறிதலில் கவனம் ஈர்த்த நீரஜ் சோப்ரா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா குத்துச் சண்டை பிரிவில் அமித்பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்கள்.