”நிலவில் 4ஜி நெட்வொர்க்” ? – நாசாவுடன் இணைந்து நோக்கியா முயற்சி

”நிலவில் 4ஜி நெட்வொர்க்” ? – நாசாவுடன் இணைந்து நோக்கியா முயற்சி

நாசாவுடன் கைகோர்த்து நிலவில் 4ஜி எல்டிஇ நெட்வொர்க் அமைப்பதற்கான முயற்சியில் நோக்கியா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

”நிலவில் 4ஜி நெட்வொர்க்” ? – நாசாவுடன் இணைந்து நோக்கியா முயற்சி

இதன் மூலம் நிலவை ஆய்வு செய்ய செல்லும் விண்வெளி வீராங்கனைகள் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என திட்டமிட்டுள்ள நாசா அமைப்பு, அங்கிருந்து எச்டி தரத்திலான படங்களை அனுப்பவும் வசதியாக இருக்கும் என கருதுவதாக தெரிகிறது. இதற்காக, 1 கோடியே 41 லட்சம் டாலர் நிதியை

”நிலவில் 4ஜி நெட்வொர்க்” ? – நாசாவுடன் இணைந்து நோக்கியா முயற்சி

நோக்கியா நிறுவனத்திற்கு நாசா அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிதியை கொண்டு, நிலவில் எல்டிஇ நெட்வொர்க்கை திறன் மிக்க வகையில் எவ்வாறு அமைப்பது என்பது குறித்து நோக்கியா நிறுவனம் முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது.

”நிலவில் 4ஜி நெட்வொர்க்” ? – நாசாவுடன் இணைந்து நோக்கியா முயற்சி

நிலவில் எல்டிஇ நெட்வொர்க் அமைப்பது தொடர்பாக நோக்கியா முயற்சி மேற்கொள்வது இது புதிதல்ல. ஏற்கனவே அப்போலா 17 விண்கலம் தரையிறங்கும் போது, நிலவில் இருந்து பூமிக்கு அதி துல்லிய படக்காட்சி கொண்ட காணொளிகளை அனுப்ப வசதியாக வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து நிலவில் எல்டிஇ நெட்வொர்க் அமைக்க நோக்கியா முயற்சி மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.