சி3 போன்களின் விலையை குறைக்க நோக்கியா அதிரடி முடிவு!

 

சி3 போன்களின் விலையை குறைக்க நோக்கியா அதிரடி முடிவு!

நோக்கியா சி3 போன்களின் விலையை குறைக்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2 ஜிபி ராம் . 16 ஜிபி நினைவகம் வசதி, 3 ஜிபி ராம் 32 ஜிபி நினைவக வசதி கொண்ட இரண்டு மாடல்களிலும் சுமார் 1500 ரூபாய்க்கு மேல் விலை குறைத்துள்ளது. இது தவிர நோக்கியாவின் டாப் எண்ட் மாடல்களின் விலையை குறைக்கவும் முடிவு செய்துள்ளது. நோக்கியாவின் டாப் எண்ட் மாடல்களிலும் சுமார் ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை குறைக்க முடிவு செய்துள்ளது. சி3 2 ஜிபி ராம் போனுக்கு ரூ.1,500 ரூபாயும், 3ஜிபி ராம் வசதி கொண்ட போனுக்கு 2 ஆயிரம் ரூபாயும் விலைத் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த போன்களின் விலை ரூ.6,999, மற்றும் ரூ.7,999 என குறைந்துள்ளது.

சி3 போன்களின் விலையை குறைக்க நோக்கியா அதிரடி முடிவு!

இந்த விலை குறைப்பு அறிவிப்பு நோக்கியா இணையதளத்திலும், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்களிலும் கிடைக்கிறது. சி3 மாடல் ஸ்ஆர்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி தொடுதிரை வசதி கொண்டுள்ளது. 8 எம்பி பின்பக்க கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

சி3 போன்களின் விலையை குறைக்க நோக்கியா அதிரடி முடிவு!

நோக்கியா போன்களில் சார்ஜர் திறன் அதிகமாக இருக்கும் என்பதற்கு ஏற்ப, இந்த போன்களில் 2 ஜி சேவையில் இயங்கினால் 50 மணி நேரம் டாக் டைம் என உத்தரவாதம் கொடுத்துள்ளது. 3ஜி சேவையில் 23 மணி நேரமும்,4 ஜி சேவையில் 22 மணி நேரம் சார்ஜர் நீடிக்கும். இந்த போனில் எடை 180 கிராமாகும். சி3 மாடல்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைபோல, அனைத்து மாடல்களுக்கும் சுமார் ரூ.1,500 வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.