darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



தமிழகத்தில் நோக்கியா தொழிற்சாலை! 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு!

நோக்கியா தொழிற்சாலை
நோக்கியா தொழிற்சாலை

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் நிறுவனமான நோக்கியா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வந்தனர். ஆனால், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய பல கோடி ரூபாயை நோக்கியா தொழிற்சாலை பாக்கி வைத்திருந்தது. அந்த பணத்தை வசூலிக்க அரசு தீவரமாக நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு ஆலையை மூடி விட்டு வெளியேறினார்கள். இந்நிலையில் பின்லாந்து நாட்டின் சால்காம்ப் நிறுவனம் நோக்கியா வளாகத்தை தற்போது கையகப்படுத்தி உள்ளது.

nokia

உலக அளவில் முன்னணி நிறுவனமான சால்காம்ப், ஆப்பிள் போன் நிறுவனத்துக்கு தேவையான பெரும்பாலான உதிரிப்பாகங்களை தயாரித்து வழங்குகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் சென்னையில் இரண்டு இடங்களிலும், டெல்லி அருகே நொய்டாவிலும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. தற்போது, நோக்கியா ஆலையையும், அதனருகே உள்ள லைட் ஆன் மொபைல் நிறுவனத்தையும் ரூ.350 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அடுத்த ஆண்டு இதன் உற்பத்தியை தொடங்க இருப்பதாகவும், சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.