”வயர்லெஸ் ஸ்பீக்கர் மற்றும் இயர் பட்” – நோக்கியா அறிமுகம் !

 

”வயர்லெஸ் ஸ்பீக்கர் மற்றும் இயர் பட்” –  நோக்கியா அறிமுகம் !

வயர்லெஸ் ஸ்பீக்கர் மற்றும் வயர்லெஸ் இயர் பட்களை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது

வயர்லெஸ் போர்டபிள் ஸ்பீக்கர் சுமார் 3 ஆயிரம் என்ற விலைக்கு அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்பீக்கர், புளூடூத் 5.0, 800 எம்ஏஎச் பேட்டரி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உடன் வருகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”வயர்லெஸ் ஸ்பீக்கர் மற்றும் இயர் பட்” –  நோக்கியா அறிமுகம் !

இதனிடையே நோக்கியா நிறுவனம், வயர்லெஸ் இயர் பட் லைட் என்ற புதிய இயர் பட்’களை முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது. மூன்று வகையான வண்ணங்களில் வரும் இந்த இயர் பட்கள் ஒவ்வொன்றிலும் 60 எம் ஏ எச் பேட்டரி உள்ளது என்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 35 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும் என தெரிகிறது.

”வயர்லெஸ் ஸ்பீக்கர் மற்றும் இயர் பட்” –  நோக்கியா அறிமுகம் !

மேலும், வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டெண்ட் சிறப்பு கொண்ட இந்த இயர்பட் இன் சார்ஜிங் கேஸ் 600 எம் ஏ எச் கொண்டது. இந்த இயர் பட் ஐ கொண்டு, அழைப்பை எடுக்கவும், பாடல்களை மாற்றுவதற்கும் டச் கண்ட்ரோல் உள்ளது என்றும் இதில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வசதி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 5,200 ஆகும்.

இந்த இரண்டு பொருட்களும் இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து நோக்கியா நிறுவனம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

எஸ். முத்துக்குமார்