”4ஜி வசதி கொண்ட இரண்டு ஃபீச்சர் போன்கள்” – நோக்கியா அறிமுகம்

 

”4ஜி வசதி கொண்ட இரண்டு ஃபீச்சர் போன்கள்” – நோக்கியா அறிமுகம்

215 4ஜி மற்றும் 225 4ஜி ஆகிய இரண்டு 4ஜி பீச்சர் போன்களை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

டச் ஸ்கிரீன் எனப்படும் தொடுதிரை வசதி கொண்ட ஃஸ்மார்ட்போன்கள் பரவலாக பெரும்பாலானோர் கைகளுக்கு வந்துவிட்டாலும் கூட, இன்றளவும், பட்டன் வைத்த ஃபீச்சர் போன்களை பயன்படுத்துவதையே பலர் விரும்புகின்றனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் 2ஜி – 3ஜி சேவை பெறும் வாடிக்கையாளர்கள் இந்த போன்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் 215 4ஜி மற்றும் 225 4ஜி என்ற 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர் வகை போன்களை நோக்கியா நிறுவனம் சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

”4ஜி வசதி கொண்ட இரண்டு ஃபீச்சர் போன்கள்” – நோக்கியா அறிமுகம்

இந்த போன்களில் 2.4 இன்ச் எல்சிடி திரை, வயர்லெஸ் ஃஎப்எம் ரேடியோ, டார்ச்லைட், புளூடூத் ஆகியவற்றுடன் இரண்டு 4ஜி சிம்கார்டுகள் இணைத்து பேசும் வசதி ஆகியவை உள்ளது. மேலும், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஜாக் ஆகியவையும் உள்ளது. இந்த இரண்டு மாடல் போன்களில் உள்ள ஒரே வித்தியாசம் என்றால் அது 225 4ஜி போன் பின்புறத்தில் உள்ள விஜிஏ கேமரா மட்டும்தான். இவற்றின் விலையை பொறுத்தவரை 215 4ஜி 3100 ரூபாய் மற்றும் 225 4ஜி போன் ரூ 4120 ரூபாய் என்ற இந்திய மதிப்பில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

”4ஜி வசதி கொண்ட இரண்டு ஃபீச்சர் போன்கள்” – நோக்கியா அறிமுகம்

தற்போதைக்கு சீனாவில் அறிமுகமாகி இருந்தாலும், இந்த போன்கள் விரைவில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்